விஜய் 1994ல் வெளியான ரசிகன் முதல் கடைசியாக வெளியான பைரவா வரை மொத்தம் 32 பாடல்கள் பாடியுள்ளார். சூர்யாவின் பெரியானா படத்தில் மட்டும் மூன்று பாடல்களை பாடியுள்ளார். 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்திற்கு பிறகு விஜய் 7 வருடங்கள் எந்த படத்திலும் பாடவில்லை. அதன் பின் 2012ஆம் ஆண்டு ஹாரிஸ் இசையில் வெளியான துப்பாக்கி படத்தில் பாடியுள்ளார். அதன் பின் தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா என அணைத்து படங்களிலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

5-best-songs-of-vijay-the-singer
விஜய்க்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் மெர்சல் வெளியாகவுள்ளது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் விஜய் மெர்சல் படத்தில் எந்த ஒரு பாடலும் பாடவில்லையாம், தொடர்ச்சியாக மெர்சல் படத்தின் ஷூட்டிங் நடப்பதால் விஜய் இந்த படத்தில் பாடவில்லை என செய்திகள் வந்துள்ளது. ஆனால் படத்தின் டிராக் லிஸ்ட் வந்தால் மட்டும் தான் உறுதியாக கூறமுடியும்.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *