10 முறை தேசியவிருது வென்ற டெக்னிஷியனுடன் சேரும் சிம்பு – திருப்புமுனையா ???

சிம்புவின் அடுத்த படத்தில் பாடல்கள், இடைவேளை எதுவும் கிடையாது என்று அறிவித்துள்ளார் சிம்பு. ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படத்திற்கு சிம்பு திரைக்கதை எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த படத்தில் யுவன் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார்.

தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் மணிரத்னம் இயக்கிய ராவணன், முருகதாஸின் துப்பாக்கி படங்களில் ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் தான் சிம்புவின் அடுத்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சந்தோஷ் சிவன் 10 முறைக்கு மேல் தேசியவிருது வென்றுள்ளார். கெளதம் மேனனின் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு எடிட்டிங் செய்த ஆண்டனி இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்யவுள்ளார். நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *