அடித்து நொறுக்கிய விஜயின் மெர்சல் படத்தின் கேரளா உரிமை !!!

அட்லீ இயக்கத்தில் விஜய், சத்யராஜ், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, நித்யாமேனன், காஜல் அஃகர்வால், வடிவேலு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள படம் மெர்சல். ரஹ்மான் இசையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் கேரளா உரிமையை 7.5 கோடிக்கு(MG) வாங்கியுள்ளனர். கடந்த வருடம் ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலி படமும் 7.5 கோடிக்கு தான் கேரளாவில் வாங்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான தொகை குடுத்து மெர்சல் படத்தை வாங்கியுள்ளதால் மிகப்பெரிய ஓப்பனிங் விஜயின் மெர்சலுக்கு கேரளாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு கடைசியாக வெளியான பைரவா 5.4 கோடிக்கும், தெறி 5.5 கோடிக்கும், புலி 4 கோடிக்கும் கேரளாவில் வாங்கியுள்ளனர்.

Mersal

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *