விஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா ???

ரஜினிகாந்தின் காலா ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. நாளை முதல் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமாகும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் நாள் தமிழக வசூலில் விஜயின் மெர்சல் முதல் இடத்தில் உள்ளது. இப்படம் முதல் நாளில் மட்டும் 23.75 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னை 1.52 கோடி
செங்கல்பட் 5.5 கோடி
கோயம்பத்தூர் 3.25 கோடி
மதுரை 2.85 கோடி
வட/தென் ஆர்காட் 3.63 கோடி
திருச்சி,தஞ்சாவூர் 2.4 கோடி
சேலம் 3.3 கோடி
திருநெல்வேலி கன்னியாகுமாரி 1.3 கோடி

ரஜினிகாந்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் கபாலி அதிக வசூல் செய்துள்ளது. கபாலியின் முதல் நாள் தமிழக வசூல் 19 கோடி. கபாலி வெளியான சமயத்தில் வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. அதே போல இந்த முறை மெர்சல் சாதனையை முறியடிக்கும் என ரஜினியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

rajini vijay

ஆனால் கபாலிக்கு இருந்த எதிர்பார்ப்பு காலாவுக்கு இல்லை, தயாரிப்பு நிறுவனம் ப்ரமோஷன் பெரிய அளவில் செய்யவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள்.

ரஜினியின் காலா மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *