AJITH SIVA

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது இந்த படத்தில் கோவை சரளாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், மதுமிதா என ஒரு பெரிய காமெடி பட்டாளமே நடித்துவருகிறது இதில் கோவை சரளாவும் இணைந்துள்ளார்.

தற்போது வந்திருக்கும் தகவல் என்னவென்றால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என செய்திகள் வந்துள்ளது. ஆக்ஷ்ன், காமெடி, செண்டிமெண்ட், என அனைத்தையும் கலந்து ஒரு பக்கா பேமிலி என்டர்டைனர் படமாக இது இருக்கும். பொங்கலுக்கு இந்த படம் வெளியாவதால் 7 நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை வரும். அதனால் ABC என மூன்று சென்டரில் அஜித் இந்த விஸ்வாசத்தில் இறங்கி அடிக்க வாய்ப்புள்ளது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *