விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். ஜூலை கடைசி வாரத்தில் USA படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது. ஆகஸ்டில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.

Sarkar

கடந்த வருடம் வெளியான மெர்சலுக்கு ட்ரைலர் வெளியாகவில்லை. ஆனால் இந்த முறை சர்காரில் டீஸர் ட்ரைலர் என இரண்டும் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளது. நவம்பர் 6 சர்கார் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். அதனால் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே போல படத்தின் டீஸர் ஆகஸ்டில் வெளியிட உள்ளார்களாம். அதனால் டீஸர், ட்ரைலர். பாடல்கள் என அடுத்த நான்கு மாதங்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *